Print

Print


வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் (Federation of Tamil Sangams of North America - FeTNA) 28-ஆம் தமிழ் விழா, சூலை 2 முதல் 5 வரை கலிபோர்னியா மாகாணத்திலுள்ள சான் ஓசே நகரத்தில் “தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்!!” என்ற உன்னதத் தலைப்போடு சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது தாங்கள் அறிந்ததே.

தமிழர்களின் கலை, இலக்கியம், வாழ்வியல் சார்ந்த பல தரப்பட்ட சுவையான நிகழ்வுகள் விழாவிற்கு வரும் ஒவ்வொருவரும் பார்த்து, கேட்டு மகிழ்ந்து பயன்பெறும் வகையில் நடைபெறவுள்ளது. இதனை அமெரிக்கத் தமிழர்களின் பெரு விழா என்றால் அது மிகையன்று! 

அத்தகைய சிறப்பு மிகு விழாவில் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் பார்த்து, கேட்டு மகிழ மட்டுமல்லாமல், பங்கேற்று மகிழும் வகையிலும் பல தரப்பட்ட நிகழ்ச்சிகளும், போட்டிகளும் நடைபெறவுள்ளது. 

கீழே பட்டியலிடப்பட்ட அந் நிகழ்வுகளில் பங்கேற்றுப் பயன்பெற பேரவை உங்களை அன்புடன் அழைக்கிறது. விருப்பமுடையவர்கள், உடனடியாகத் தங்களை இணையத்தின் மூலமாகப் பதிந்துகொள்ளவும் அல்லது மின்னஞ்சலின் மூலமாகத் தொடர்பு கொள்ளவும்.
அறிவார்ந்த, நகைச்சுவை நிறைந்த கருத்துக்களம் நிகழ்ச்சி:-

அமைப்பு (Format): விஜய் தொலைக்காட்சியின் "நீயா? நானா?" வடிவத்தில் அமைந்த, ஒரு அணிக்கு 10 முதல் 15 உறுப்பினர்களைக் கொண்ட, இரண்டு அணிகள் கருத்தாடும் / வாதாடும் நிகழ்ச்சி (Vijay TV's "Neeyaa? Naanaa?" style debate between 2 teams with 10 - 15 members in each team)

தலைப்பு (Title):- தமிழன் தன் அடையாளத்தை நிலைநிறுத்த மிகவும் அவசியமானது மொழியா, கலையா?

ஒருங்கிணைப்பாளர் (Organizer): கவிஞர் சுமதி ஶ்ரீ (Kavingar Sumathi Sree)

மொத்தப் பங்கேற்பாளர்கள் (Total Participants): 20 முதல் 30 ( 20 to 30)

பதிவு செய்யக் கடைசி நாள் (Register By): ஏப்ரல் 30, 2015 (April 30, 2015)

பதிவு செய்ய (To Register): [log in to unmask] என்ற மின்னஞ்சலுக்குத் தொடர்பு கொள்ளவும்.கவியரங்கம்:- 

கவிமாமணி பேராசிரியர் அப்துல்காதர் அவர்கள் தலைமையில் "ஆர்த்தெழு நீ!" என்ற பொதுத் தலைப்பில் ஃபெட்னா தமிழ்விழாவில் கவியரங்கம் நடைபெற உள்ளது. கவியரங்கத்தில் பங்குபெற தமிழார்வலர் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம். கீழ்க்காணும் துணைத்தலைப்புகள் ஏதேனும் ஒன்றில் மூன்று நிமிடங்களுக்கு மிகாமல் கவிதை இயம்ப வாய்ப்பளிக்கப்படும்.

* சமத்துவம் காண       
* பெண்ணியம் பேண
* மேற்குலகு நாண      
* பகுத்தறிவு பூண
* உறவுகள் செழிக்க     
* இன நலம் தாங்க
* மொழி வளம் ஓங்க     
* சுற்றுச்சூழல் கேடு நீங்க

இதில் பங்கேற்க விருப்பம் தெரிவித்தோர்/தெரிவிப்போர் தங்கள் கவிதைகளை தெரிவுசெய்யப்பட்ட துணைத்தலைப்புகளில் எழுதி மின்னஞ்சல் மூலம் வரும் மே மாதம் 10ஆம் தேதிக்குள் fetna2015.kaviyarangam@gmail என்ற முகவரிக்கு ஒருங்குறியில்(unicode) தட்டச்சு செய்து அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். பெறப்பட்ட கவிதைகள் அனைத்தையும் கவியரங்க நடுவர் அய்யா அப்துல்காதர் அவர்களுக்கு அனுப்பி அதிலிருந்து எட்டு கவிதைகளை அவர் தேர்ந்தெடுப்பதாக திட்டம்.

மாபெரும் தமிழ் இலக்கிய விநாடி வினா பல்லூடக நிகழ்ச்சி:-

தமிழ் இலக்கியத்தில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் எட்டு ஆண்டுகளாக இலக்கியம் சார்ந்த விநாடி வினா நிகழ்ச்சி பேரவை விழாவில் நடந்து வருகிறது.
இந்த ஆண்டு பாடத்திட்டத்தில் 

திருக்குறள், 
சிலப்பதிகாரம், 
அடிப்படை இலக்கணம், 
சமய இலக்கியம்,
நீதி இலக்கியம், 
நாட்டுநடப்பு 
தமிழ் இலக்கிய வரலாறு 
முதலிய பகுதிகள் அடங்கும். இரண்டு மாத காலம் பல்வழி அழைப்பு வழியாக முறையாக பயிற்சியளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாபநாசம் சிவன் அணி, வீ.ப.கா சுந்தரம் அணி என இரு அணிகளாகப் பிரிந்து ஒவ்வொரு அணியிலும் 25 உறுப்பினர்கள் போட்டியில் கலந்துகொள்கின்றனர்.
கருத்தும் ஆக்கமும்: நாஞ்சில் பீற்றர்
அணித்தலைவிகள்: திருமதி சாந்தி விஜயகுமார்(வெர்ஜீனியா) மற்றும் திருமதி சாந்தி புகழேந்தி (கலிஃபோர்னியா)
பயிற்சியாளர்:- கொழந்தவேல் இராமசாமி
போட்டிகள்:-

போட்டியின் பெயர்	போட்டிக் குறிப்பு 
மற்றும் பதிவு	பதிவு செய்ய
 கடைசி நாள்
குறள் தேனிப் போட்டி


http://fetna2015.org/
competitions/#kural

மே 30
ஓவியப் போட்டி


http://newsletter.fetna.org/l/zAcm68921M5ZEccmEFO4G08w/nEv8KkgDG1YDlqqfjdu7632w/FBtfgLJ0LWUl4XNU0nWV6A
/drawing

மே 30
புகைப்படப் போட்டி


http://fetna2015.org/competitions
/#photography

மே 15
குறும்படப் போட்டி


http://fetna2015.org/
competitions/#shortfilm

மே 30